தமிழ்நாடு

tamil nadu

புரெவி புயல்: இராமநாதபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

By

Published : Dec 2, 2020, 3:38 PM IST

இராமநாதபுரம்: புரெவி புயல் காரணமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லும் பணி தொடங்கியது.

புரெவி புயல்: இராமநாதபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
புரெவி புயல்: இராமநாதபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

புரெவி புயல் நாளை (டிச. 3) கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கம்பி பாடு, முந்தல்முனை உள்ளிட்ட கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மீனவர்களை அதிகாரிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மீனவர்கள் தங்களது உடமைகள், செல்ல பிராணிகள், மீன்பிடி சாதனங்கள், நாட்டு படகுக்கான உரிய ஆவணங்கள், வாக்ககாளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக எடுத்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க...புயலைச் சமாளிக்க தயார் - திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details