தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ராமநாதபுரம் : இமானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையை முன்னிட்டு, நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

குரு பூஜைகளை முன்னிட்டு 144 தடை

By

Published : Sep 8, 2019, 5:20 PM IST

ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி அருகே உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் குரு பூஜை வருகின்ற செப்.11ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் அக்.30ஆம் தேதி கமுதியில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள், குரு பூஜை விழா நடைபெறுகிறது.

இதனை, அந்தந்த சமூகத்தினர் கொண்டாடுவது வழக்கம். இதில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமலும், பொது அமைதியை காக்கும் நோக்கிலும் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

இந்நிலையில், இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (9.9.2019) முதல் இரண்டு மாத காலங்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பிறப்பித்துள்ளார்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் குரு பூஜை

இதில், குறிப்பாக 09.09.2019 முதல் 15.09.2019 வரையிலான நாட்களும், 25.10.2019 முதல் 31.10.2019 வரையிலான நாட்களிலும் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களில் மட்டும குரு பூஜைக்கு வரவேண்டும், வாகனங்களை 1 கி.மீ தொலைவிற்கு முன்பாகவே காவல்துறை ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்திவைத்துவிட்டு நடந்து செல்ல வேண்டும் என பலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details