இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் கோவிலாங்குளம், கோவிலாங்குளம் பட்டி, கண்மாய் பட்டி, ஆரைகுடி உள்ளிட்ட ஊர்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.
இந்நிலையில் 5 ஆயிரம் ஏக்கர் நெல், சோளம் 3 ஆயிரத்து 500 ஏக்கர், கேழ்வரகு ஆயிரம் ஏக்கர், கம்பு 500 ஏக்கர் உள்ளிட்டவற்றில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 10 நாள்களாக பெய்த தொடர் மழையால் அனைத்தும் முளைக்க தொடங்கி விட்டன.