தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்: விவசாயிகள் போர்க்கொடி - தேர்தலை புறக்கணிப்போம்

ராமநாதபுரம்: மழை இல்லாத காரணத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும், இல்லையென்றால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்: விவசாயிகள்  போர்கொடி

By

Published : Apr 15, 2019, 7:56 PM IST

ராமநாதபுர மாவட்டம் தேவிப்பட்டிணம், பிர்க்கா, வெண்ணத்தூர், குரூப்பில், சம்பை, பாப்பனேந்தல், உள்ளிட்ட கிராமங்கள் மழை இல்லாத காரணத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 2016 - 2017ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கும் குறைந்த தொகை மட்டுமே வந்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவிடம் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details