மின் மயானத்தை விரைந்து திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ராமேஸ்வரம் லட்சுமணர் தீர்த்தம் சுடுகாட்டில் பிணத்திற்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமேஸ்வரம் வட்டச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
பிணத்துக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டம்! - buried place
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் மின் மயானத்தை விரைந்து திறக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, சுடுகாட்டில் பிணத்துக்கு மனு கொடுக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
![பிணத்துக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3983455-587-3983455-1564422381557.jpg)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்
இந்தப் போராட்டம் குறித்து முருகானந்தம் கூறியதாவது, “ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. ஆடி அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ காலங்களில் போக்குவரத்தை சிவகாமி நகர் சாலை வழியாகத் திருப்பி விடுகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாகச் செல்லும்போது ஏற்கனவே பழுதடைந்த சாலை மேலும் சேதமடையும். இதனால் இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும். லட்சுமண தீர்த்தம் சுடுகாட்டில் கட்டப்பட்டுள்ள மின் மயானத்தை விரைந்து திறக்க வேண்டும்.”, என்று கூறினார்.