தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் நூதன ஆர்ப்பாட்டம்! - rameswaram municipality against protest

ராமேஸ்வரம்: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பணப் பொங்கல் வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் நூதன ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் நூதன ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 28, 2020, 8:38 PM IST

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அக்கட்சியின் நகர செயலாளர் முருகானந்தம் மண்பானையில் பணப் பொங்கல் வைத்து தங்களது எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்தார். இதில் 30க்கும் மேற்பட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நகர செயலாளர் முருகானந்தம் கூறும்போது, "நகராட்சி நிர்வாகம் தொண்டு நிறுவனத்தினர் கொடுத்த கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை போன்றவற்றை மாவட்ட அலுவலர்களுக்கு கொடுத்துவிட்டு அரசு பணத்தில் வாங்கியவாறு பொய் கணக்கு காண்பிக்கின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு கொடுத்த பல லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details