தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதியமைச்சரை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம்! - cpi party protest

ராமநாதபுரம்: ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடி நிதியுதவி வழங்காமல் வெற்று அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அல்வா கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

நிதியமைச்சரை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம்!
நிதியமைச்சரை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம்!

By

Published : May 19, 2020, 9:54 PM IST

கரோனா ஊரடங்கால் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 20 லட்சம் கோடி ரூபாயை, எந்த எந்த துறைக்கு எவ்வளவு வழங்கப்படும் என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து கட்டங்களாக அறிவித்தார். இதில் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில முறையான அறிவிப்பு இல்லை என்ற விமர்சனம் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடி நிதியுதவி வழங்காமல் வெற்று அறிவிப்புகளை வெளியிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்தும், இன்று ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் 'அல்வா' கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கீழடி அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும்!

ABOUT THE AUTHOR

...view details