தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரத ஸ்டேட் வங்கி மேலாளரைக் கைது செய்யவந்த நீதிமன்ற அமீனா! - State Bank of India

ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்த நீதிமன்ற அமீனா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

வங்கிக்கு வந்த  கோர்ட் அமீனா
வங்கிக்கு வந்த கோர்ட் அமீனா

By

Published : Dec 11, 2020, 6:22 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள முதுநாள் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன். இவர் மண்புழு உரம் தயாரிப்பதற்காக ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் 2007ஆம் ஆண்டு நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

ஒரு லட்சத்து இருபதாயிரம் மானியத்துடன் பெறப்பட்ட கடன் தொகையில் மீதித் தொகையைச் செலுத்திய நிலையில், மானியத் தொகையும் செலுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். அதன்படி அவர் தொடுத்த வழக்கில் லோக் அதாலத் நீதிமன்றமானது, மானியத்தைச் செலுத்த வேண்டியதில்லை, மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தினால்போதும் என்று உத்தரவிட்டது.

அதன்பின், மீதமுள்ள தொகையைச் செலுத்திய ராதாகிருஷ்ணனுக்கு, வங்கி நிர்வாகத்தின் சார்பில் அவர் அடைமானம் வைத்த இரண்டு பத்திரங்களைத் திரும்ப வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

வங்கிக்கு வந்த நீதிமன்ற அமீனா

இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முல்லை, கடன் தொகையைச் செலுத்திய பிறகும் அடைமான பத்திரங்களைத் திரும்ப வழங்காத வங்கி மேலாளரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று (டிச. 10) நீதிமன்ற அமினா பாலகிருஷ்ணன், விவசாயக் கடன் பிரிவு மேலாளரைக் கைதுசெய்ய வங்கிக்குச் சென்றார். அப்போது உடன் மனுதாரர் ராதாகிருஷ்ணனும் சென்றார். ஆனால் அங்கு மேலாளர் இல்லாததால் அமினா திரும்பிச் சென்றார்.

இது குறித்த தகவல் அறிந்து செய்தியாளர்கள் ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்று புகார் கொடுத்த விவசாயிடம் பேட்டி எடுத்தனர். அப்போது அங்கு வந்த வங்கியின் பாதுகாவலர்கள், செய்தியாளர்களைப் பேட்டி எடுக்கவிடாமல் தடுத்து, இடையூறு செய்தனர். இதனால் செய்தியாளர்களுக்கும், வங்கிப் பாதுகாவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:சூரப்பாவுக்கு ஆதரவாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details