ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தோப்படைபட்டி கிராமத்தில் ஆயுதங்கள் பதுக்கிவைத்திருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆறு நாள்களுக்கு மேலாக நள்ளிரவில் காவல் துறையினர் பல இடங்களில் குழிதோண்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர்.
அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்த பெண் உள்பட 6 பேர் கைது - நாட்டு துப்பாக்கி
ராமநாதபுரம்: கமுதி அருகே அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர் ஆறு பேரை கைதுசெய்துள்ளனர்.

Country guns seized
அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்த பெண் உள்பட ஆறு பேர் கைது
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளைக் கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், ராமலிங்கம், முருகன், அந்தோணி, ஆத்திமுத்து, செல்வமேரி ஆகியோரை கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்த 2 இளைஞர்கள் கைது