தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி - ramanathapuram news

ராமநாதபுரம்: கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று அறிகுறிகளுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி
ராமநாதபுரத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி

By

Published : Mar 21, 2020, 5:01 PM IST

துபாயிலிருந்து ராமநாதபுரம் வந்த தொண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று அறிகுறி தென்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார். இந்நிலையில், கேரளாவில் 11 நாட்கள் தங்கிவிட்டு, ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நபருக்கும் கரோனா அறிகுறி இருப்பதாக தெரியவந்ததுள்ளது.

ராமநாதபுரத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி

இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது இருவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. ஒரே நாளில் இருவர் கோவிட்-19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குலுக்கல் சீட்டு மூலம் தேர்வான ஊராட்சித் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details