ராமநாதபுர மாவட்டம் முழுவதிலும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மினி கிளினிக் என கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா விதிமீறல்: ராமநாதபுரத்தில் 6.95 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் - கரோனா தடுப்பூசி மையம்
ராமநாதபுரம்: கரோனா விதிமுறை மீறல் காரணமாக இதுவரை 6.95 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல்செய்யப்பட்டுள்ளது.
![கரோனா விதிமீறல்: ராமநாதபுரத்தில் 6.95 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11338589-418-11338589-1617954186432.jpg)
corona
மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் மாதம் முதல் இதுவரை ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.