தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்! - ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம்: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

By

Published : May 9, 2021, 12:49 PM IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (மே 08) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, `ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இப்பணிகளுக்கு ஊராட்சி அளவில் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் . மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 328 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் .

இதில் 847 பேர் அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது . மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75ஆயிரத்து 473 நபர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது .

மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகராட்சிகள் , மண்டபம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது .

அதன்படி , இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தொற்று தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்திட வேண்டும் . ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களது ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் தொற்று உறுதி செய்யப்படும் இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து கண்காணித்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் .

அதேநேரத்தில் , கட்டுப்பாட்டு பகுதியில் இருப்போருக்காக அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி அவர்களது வீடுகளுக்கே கிடைத்திடும் வகையில் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details