தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நோயாளியின் ”மரண வாக்குமூலம்” - கரோனா நோயாளியின் மரண வாக்குமூலம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என்று கரோனா நோயாளி ஒருவர் மரண வாக்குமூலம் என்று கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

By

Published : May 13, 2021, 2:58 PM IST

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உணவு வழங்கப்படுவதில்லை என்று அங்குள்ள அலுவலர்களிடம் நோயாளிகள் புகார் அளித்தனர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து கரோனா பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர் ”தனது மரண வாக்குமூலம்” என்று ஒரு கடிதத்தை எழுதி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘எனது தாய், தந்தையுடன் கரோனா சிகிச்சை பிரிவில் நான் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நாங்கள் இங்கு பசியும், பட்டினியுமாய் இருக்கிறோம். நோயாளிகளுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை. மேலும் மருத்துவமனையானது சுகாதார சீர்கேடாகக் காணப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள், அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம்தான் முழு பொறுப்பு என்பதை இதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு தெரியப்படுத்துகிறேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details