தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2020, 7:13 PM IST

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை சவக்குழியில் வீசிச் சென்ற அவலம் - வைரலாகும் காணொலி

ராமநாதபுரம் : பரமக்குடியில் கரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை சுகாதாரத் துறையினர் நல்லடக்கம் செய்யும் குழிக்குள் வீசிச் செல்லும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

பரமக்குடியில் கரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை சுகாதாரத் துறையினர் நல்லடக்கம் செய்யும் குழிக்குள் வீசிச் செல்லும் காணொலி
பரமக்குடியில் கரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை சுகாதாரத் துறையினர் நல்லடக்கம் செய்யும் குழிக்குள் வீசிச் செல்லும் காணொலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 474ஆக உயர்ந்துள்ளது. பரமக்குடியில் மட்டும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்தனர். 21 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்து நிலையில், அவரது உடல்நலம் குன்றியதால், நேற்று முன்தினம் (ஜூன் 24) மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை சுகாதாரத் துறையினர் நேற்று (ஜூன் 25) இரவு பரமக்குடி வைகை ஆற்றுப்படுகையில் உள்ள காக்கா தோப்பு என்ற மயானத்தில் பள்ளம் தோண்டி, முறையாக அடக்கம் செய்யாமல், தூக்கி குழியில் வீசியுள்ளனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க :அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்திய இருவர்!

ABOUT THE AUTHOR

...view details