தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு! - Old Dead By Corona In Ramanathapuram

ராமநாதபுரம்: கமுதி அருகே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டி இன்று (மார்.18) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கமுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு  ராமநாதபுரம் கரோனா செய்திகள்  கரோனாவால் மூதாட்டி உயிரிழப்பு  Ramanathapuram Corona Updates  Covid19 updates  Old Dead By Corona In Ramanathapuram  Corona-infected Old Lady Dead in Kamudi
Corona Dead

By

Published : Mar 18, 2021, 3:04 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலெட்சுமி (65). இவர் உடல்நலக் குறைவால் மார்ச் 15ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (மார்ச்.18) மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இத்தகவலறிந்த பசும்பொன், கமுதி பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இவர் 5 ஆண்டுகளாக ரத்த அழுத்தத்தாலும், 15 ஆண்டுகளாக சர்க்கரை வியாதியாலும் அவதிப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேரையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அசோக் கூறுகையில்,"பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வமின்றி இருக்கின்றனர். கரோனா அலை மீண்டும் தலை தூக்கியுள்ளதால் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நோயினால் அவதிப்படுபவர்கள், முதியவர்கள் முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில், அரசு மருத்துமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:குமரியில் 100க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

ABOUT THE AUTHOR

...view details