ராமநாதபுரம் மாவட்டத்தின் கரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தொற்று புதிதாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 3-வது நாளாக நேற்று (மே .1) ஒரே நாளில் புதிதாக ராமநாதபுரத்தில் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் புதிதாக 205 பேருக்கு கரோனா உறுதி - ராமநாதபுரம் செய்திகள்
ராமநாதபுரத்தில் புதிதாக 205 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Ramanathapuram
இதோடு சேர்த்து மொத்தமாக ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,175 ஆக உயர்ந்துள்ளது. 95 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கரோனா படுக்கைகள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். முறையாக முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.