ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 1) வரை மாவட்டத்தில் 3,293 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் எஸ்.பி உள்பட 45 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா தடுப்பு நடவடிக்கை
ராமநாதபுரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் ஆய்வாளர் உள்பட 45 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 2) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சைப் பலனின்றி 69 பேர் உயிரிழந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை இல்லை என்ற செய்தி மக்களுக்கு ஆறுதலை கொடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் ஆய்வாளர் உள்பட மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,338ஆக அதிகரித்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.