தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் அருகே 5 குழந்தைகள் உள்பட 31 பேருக்குக் கரோனா! - ராமநாதபுரத்தில் கரோனா அதிகரிப்பு

ராமநாதபுரம்: தெற்கு மல்லல் கிராமத்தில் 5 குழந்தைகள் உள்பட 31 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

5 குழந்தைகள் உள்பட 31 பேருக்கு கரோனா
5 குழந்தைகள் உள்பட 31 பேருக்கு கரோனா

By

Published : May 20, 2021, 2:59 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில், கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சிலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக மாவட்டத்தில், கிராமங்கள் தோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர்கள், செவிலியர் கொண்ட மருத்துவக் குழுவினர், தெற்கு மல்லல் கிராமத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கிராம மக்கள் தாமாக முன் வந்து பரிசோதனைக்கு ஒத்துழைத்தனர். கிராமத்தில் மொத்தம் 66 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 5 குழந்தைகள் உள்பட 31 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சோதனை மேற்கொள்ளப்பட்ட 66 பேரில் பாதி பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதால், கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அங்கு சென்று மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை வழங்கி அக்கிராம மக்களுக்கு அறிவுரை கூறினர். மேலும் கிராமத்தில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, நோய்த்தொற்று மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல மாவட்டத்தில், பல பகுதிகளில் உள்ள கிராமத்திலும் பலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இளநிலை மருத்துவம் படித்த மாணவர்கள்: உள்ளிருப்பு பயிற்சி மருத்துவத்திற்கு சலுகை!

ABOUT THE AUTHOR

...view details