தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் பணியாளர்களுக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி - கரோனா முதல் தவணை தடுப்பூசி

ராமநாதபுரம்: டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது.

corona

By

Published : Apr 15, 2021, 6:01 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களில், 45 வயதிற்கு மேற்பட்டோரை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு டாஸ்மாக் தலைமை நிர்வாகம் முன்னதாக அறிவுறுத்தியது.

இந்நிலையில், ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பொற்கொடியின் அறிவுறுத்தலின்படி டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனின் ஆலோசனையின் பேரில், மாவட்டத்தில் உள்ள 120 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், டாஸ்மாக் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details