ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 122 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில், 73 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பிய நிலையில், 48 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
ராமநாதபுரத்தில் கரோனாவிற்கு முதியவர் உயிரிழப்பு - Corona news update
ராமநாதபுரம்: 62 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்றுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ராமநாதபுரத்தில் கரோனாவிற்கு முதியவர் பலி!
இதற்கிடையே, சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மேலப் பண்ணைகுளத்தைச் சேர்ந்த 62 வயது முதியவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டத்தில், அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், இன்று உயிரிழந்தார். இதனால், ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்து உள்ளது.