ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று மளமளவென பரவி வருகிறது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 366 பேர் இதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (ஏப்.21) ஒரே நாளில் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை ஊழியர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு! - ராமநாதபுரம்
ராமநாதபுரம்: சுகாதாரத்துறை இணை இயக்குனர், கண்காணிப்பாளர், அலுவலக ஊழியர்கள் கரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
![ராமநாதபுரத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு! ராமநாதபுரத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11493937-thumbnail-3x2-rmd.jpg)
ராமநாதபுரம் கேணிக்கரையில் செயல்படும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலருக்கும் கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தப்பட்டது.
இதையும் படிங்க:உற்பத்தியை அதிகரிக்க வங்கிகளிடம் கடன் வாங்கிய சீரம் நிறுவனம்