ராமநாதபுரத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
மேலும், முற்றுகை இடுவதற்காக அரண்மனை முன் கூடியவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை, ஆர்ப்பாட்டமாக மாற்றி நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் பெரியார் பேரவைத் தலைவர் நாகேசுவரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி, சமூக விடுதலை முன்னணி, தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும்; டெல்லியில் அமைதி முறையில் போராடியவர்களைத் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படியுங்க:குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக நடத்தும் தொடர் போராட்டம்!