தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது குடிநீர் குழாய்கள் அகற்றுவதைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா - ராமநாதபுரம் போராட்டம்

ராமநாதபுரம்: பொது குடிநீர் குழாய்கள் அகற்றுவதைக் கண்டித்து காலி குடங்களுடன், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெற்று குடங்களுடன் முற்றுகை போராட்டம்
வெற்று குடங்களுடன் முற்றுகை போராட்டம்

By

Published : Mar 3, 2020, 3:15 PM IST

ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் பொதுக் குழாய்கள் மூலமாக, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தினர் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பை ஒவ்வொன்றாக ரத்து செய்து வந்துள்ளனர். இதனால், குடிநீரை தனியார் நபரிடம் அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

காலி குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்

இதையடுத்து, ரத்து செய்த பொதுக்குழாய் குடிநீர் இணைப்பை வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகராட்சியின் போக்கைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

பின்பு அரசு அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மீண்டும் பொது குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: கேங்மேன் பணிக்கான எழுத்துத் தேர்வு - தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details