ராமநாதபுரம்:பரமக்குடி அருகே மடந்தை கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் மனைவி கனிமொழி; இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 17.9.21 அன்று சத்யராஜ் மனைவி கனிமொழிக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டால் மனைவி உயிரிழப்பு: கைக்குழந்தையுடன் மனு கொடுக்க வந்த கணவர் - கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டால் பெண் உயிரிழப்பு
கட்டாயப்படுத்தி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததால் மனைவி உயிரிழப்பு; 16 நாள் கைக்குழந்தையுடன் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்.
குழந்தை பிறந்து கனிமொழி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் சத்யராஜின் மனைவிக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, இவருடைய அனுமதி இல்லாமலே குடும்பக் கட்டுப்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கனிமொழிக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அடுத்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சத்யராஜ் மனைவி கனிமொழி, சிகிச்சை பலனின்றி 19.9.21 அன்று உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த கனிமொழியின் கணவர் சத்யராஜ், தனது 16 நாள் கைக்குழந்தையுடன் தனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். தாயின்றி இரு குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:வேலையின்மையால் எம்.இ., படித்த இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை