தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் - communist party protest thiruporur

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

protest
protest

By

Published : Jan 8, 2020, 7:05 PM IST

ராமநாதபுரம்

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்கள் நலன், பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற போராட்டம்

இந்தப் போராட்டத்தில் சிஐடியு, எல்பிஎஃப், எம்எஸ்டிடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைதுசெய்தனர்.

ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பாக தொழிற்சங்கங்கள் ரயில்மறியல் போராட்டத்திற்கு முற்பட்டபோது, காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின் ரயில் நிலைய வாசலின் முன் அமர்ந்து ஆளும் அரசுக்கு எதிராக கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைதுசெய்தனர்.

மயிலாடுதுறை

மத்திய அரசின் பொருளாதார சீர்குலைவு, தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.

தொழிற்சங்கள் சார்பில் சாலைமறியல்

திருப்போரூர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் தொழிற்சங்கங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் இந்திய தொழிற்சங்க மையம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அங்கன்வாடி பணியாளர்கள், மின் வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

400க்கும் மேற்பட்டோர் சாலைமறியல்

நீலகிரி

கோத்தகிரியில் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டமும், முழு கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

இதையும் படிங்க: வெங்காய மாலை அணிந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details