தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை - Collectors sew for non-attendance at the meeting ramanathapuram

ராமநாதபுரம்: குறைதீர் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்வில்லை என்றால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

grievances day
grievances day

By

Published : Jan 6, 2020, 10:19 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு துறையிலான அலுவலர்களின் வருகை குறித்து கணக்கெடுப்பு நடத்தினார். அப்பொழுது பல துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அடுத்துவரும் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றும், குறைதீர் கூட்டத்திற்கு அலுவலர்கள் முறையாகப் பங்கேற்கவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் கண்டிப்பு

முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு செய்தபோது, மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் தேங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தத் துறையை சேர்ந்த அலுவலர்கள் முறையாகப் பரிசீலனை செய்து, அதனைத் தீர்க்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ‘மாற்றம் வராது, மண்ணாங்கட்டிதான் வரும்’ - இயக்குநர் சேரன்

ABOUT THE AUTHOR

...view details