தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை: ஏற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் - முத்துராமலிங்க தேவர் குருபூஜை

ராமநாதபுரம்: பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

By

Published : Oct 22, 2020, 10:03 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30ஆம் தேதி 113ஆவது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா, 58ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பசும்பொன்னில் நேரில் ஆய்வு செய்தார்.

நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், பொதுமக்களின் நலன்கருதி அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மரியாதை செலுத்த வருகை தரும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிகள், அமைப்பினர் கட்டாயம் ஆட்சியரிடம் முன் அனுமதி, வாகனத்திற்கான முன் அனுமதி பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்தலாம்.அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தருவோர் சிரமப்படாத வகையில் போதிய பாதுகாப்பு தடுப்புகள் அமைத்திட பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்தபோது
8,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவசரகால சூழ்நிலையினை எதிர்கொள்ள ஏதுவாக 11 மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அமைத்து தயார்நிலையில் வைத்திட பொது சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய குடிநீர் வசதி ஏற்படுத்திடவும், தற்காலிக கழிப்பறைகள், குப்பைத்தொட்டிகள் அமைத்திடவும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details