ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட தங்கப்பா நகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து, பொதுமக்கள் சிரமப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் வந்தது.
ராமநாதபுரத்தில் மழைநீர் தேக்கத்தால் சிரமம்: ஆட்சியர் ஆய்வு - Thangappa Nagar
ராமநாதபுரம்: கடந்த இரண்டு நாள்களாக ராமநாதபுரத்தில் மழை பெய்துவருவதால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.
ஆய்வுசெய்த ஆட்சியர்
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் தங்கப்பா நகர்ப் பகுதிக்கு நேரடியாகச் சென்று மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
மேலும், தற்காலிக வடிகால் அமைத்தும், விசைப் பம்புகளைப் பயன்படுத்தியும் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்றி அருகே உள்ள நீர்நிலையில் சேமித்திட நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.