தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

ராமநாதபுரம்: பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

Election vote counting  collector inspect election vote counting center  collector inspect election vote counting center in Ramanathapuram  வாக்கு எண்ணும் மையம்  ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையம்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  Ramanathapuram District News  ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
collector inspect election vote counting center

By

Published : Dec 25, 2020, 7:42 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆட்சியர் ஆய்வு

அதன் ஒரு பகுதியாக, தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாகப் பிரித்தல்

குறிப்பாக, தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்கள் அனைத்தையும் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாகப் பிரித்து பாதுகாப்பாக வைக்கும் பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் ஆகியவற்றின் இடவசதி, தற்போதைய நிலை, வாக்கு எண்ணும் பணிகளின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுசெல்வதற்கான வழி, வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்துசெல்வதற்கான வழி என முறையே திட்டமிடுதல் குறித்து ஆய்வுசெய்தனர்.

இதையும் படிங்க:வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பரபரப்பு: போலீஸ் - மக்கள் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details