தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாயை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

ராமநாதபுரம் : இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 ராமநாதபுரம் மீனவர்களின் குடும்பத்திற்கும், தமிழ்நாடு அரசு அறிவித்தப்படியே 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வழங்கினார்.

ராமநாதபுரம்
ராமநாதபுரம்

By

Published : Jan 22, 2021, 12:06 PM IST

கடந்த திங்கட்கிழமை (ஜன. 18), ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் அதிநவீன ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் படகு மூழ்கி மீனவர்கள் நால்வரும் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, இந்திய கடற்படையினர் படகு, ஹெலிகாப்டர் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பின்னர், நான்கு பேரின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , உயிரிழந்த 4 ராமநாதபுரம் மீனவர்களின் குடும்பத்திற்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு / அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டார்.

10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் தங்கச்சிமடத்தில் உள்ள 4 மீனவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களது குடும்பத்தாரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details