தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என் வேலையை செய்யவிடுங்க காவல் துறையிடம் காட்டமான மாவட்ட ஆட்சியர்! - Collector gets angry

ராமநாதபுரம் : மனு கொடுக்கும் இடத்தில் உள்ள கூட்ட நெரிசலை சரிசெய்த மாவட்ட ஆட்சியர், காவலரை அழைத்து உங்கள் வேலையையும் சேர்த்து நான் செய்யும்படி வைக்காதீங்க, என் வேலையை செய்யவிடுங்கள் என்று காட்டமாக கூறினார்.

காட்டமான கலெக்டெர்

By

Published : Sep 9, 2019, 7:55 PM IST


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியரிடம் குறைகளை கூற வளாகத்தில் மக்கள் குவிந்தனர்.

காவல்துறையை கண்டித்த மாவட்ட ஆட்சியர்.

பின்பு, மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் மனுவை அளிக்க மக்கள் முந்தியடித்துக் கொண்டு ஆட்சியரை நோக்கி நகர்ந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை கவனித்த ஆட்சியர் வீரராகவ ராவ் இருக்கையிலிருந்து கீழ் இறங்கிச் சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியை செய்தார்.

பின்பு, அங்கிருந்து பெண் தலைமை காவலரை அழைத்து, உங்கள் வேலையையும் சேர்த்து நான் செய்யும்படி வைக்காதீங்க; என் வேலையை என்னை செய்யவிடுங்கள் என்று காட்டமாக கூறினார்.

மேலும், மனு அளிக்க வந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலர் முத்துமாரியும் தனித்தனியாக மக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details