ராமநாதபுரம் மாவட்டம் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொணே்டு முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் எட்டாவது உலக அதிசயமாகத் திகழ்கிறார்.
முதலமைச்சர் பழனிசாமி 8ஆவது உலக அதிசயம்! - ஆர்.பி. உதயகுமார் - எடப்பாடி பழனிசாமி
ராமநாதபுரம்: உலக முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எட்டாவது உலக அதிசயமாகத் திகழ்வதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
கடந்த ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக செய்யாத விஷயங்களை முதலமைச்சர் செய்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளை மனம் இல்லாதவர் அதனால்தான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்டுவருகிறார்” என்றார்.