ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. செவிலியர் போதிய அளவில் இல்லை.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் முகவர்கள் மூலமாக தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு ஆள்பிடித்துத் தரும் முகவர்களுக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவந்தால், அவர்களுக்கு ரூ.500 வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் மீது எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து இன்று (நவ. 03) அரசு தலைமை மருத்துவமனையின் முன்பாக சிஐடியு மாவட்டத் தலைவர் ஐயாத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவனத்தில் 16 பேர் பணி நீக்கம்: சிஐடியு தொழிற்சங்கம் போராட்டம்!