தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்குத் திருமணம்: நான்கு பேர் மீது போக்சோ வழக்கு

ராமநாதபுரம்: கமுதி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர், அவரது தாயார் உள்பட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு திருமணம்
சிறுமிக்கு திருமணம்

By

Published : Apr 27, 2021, 8:32 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒழுகுபுளி கிராமத்தைச் சேர்ந்த விக்ரமாதித்தன் என்பவரின் 14 வயது மகள், அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் மகன் மணிகண்டனும் (27), சிறுமியும் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி விடுதியில் தங்கியிருந்த சிறுமியை மணிகண்டனின் தாயார் ஜோதி அழைத்துவந்து, மணிகண்டனுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

இவர்களுக்கு உடந்தையாக ஜோதியின் உறவினர்கள் கருப்பையா, லட்சுமணன் இருந்தனர். மேலும் திருமணம் முடிந்த மணிகண்டனை விருதுநகர் மாவட்டம் பரளச்சி கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் சிறுமியின் உடல் பாதிக்கப்பட்டது. எனவே அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை புறக்காவல் நிலைய காவல் துறையினர், கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியிடம் விசாரணை செய்து, அவர் கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன் அவரது தாயார் ஜோதி, உறவினர் கருப்பையா, வண்ணாங்குளத்தைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details