தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் மசோதாவை ஆதரித்தது ஏன்? - முதலமைச்சர் விளக்கம் - முதலமைச்சர் பழனிசாமி ராமநாதபுரம் வருகை

மத்திய அரசு கொண்டுவந்த விவசாயி மசோதாவில் உள்ள மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பாதுகாப்பான சட்டமாக இருக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Sep 22, 2020, 5:41 PM IST

ராமநாதபுரம் வருகை தந்துள்ள முதலமைச்சர் பழனிசாமி கரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "2019-2020 ஆம் ஆண்டில் 4ஆயிரத்து 198 முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 81ஆயிரத்து 525பேருக்கு பட்டா மாறுதல் கோரிக்கை வைத்தவர்களில் 47ஆயிரத்து 128 பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 48.5 கோடி ரூபாய் செலவில் 94 குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான 31 கோடி மதிப்பீட்டில் 44 பணிகள் எடுக்கப்பட்டு 70 விழுக்காடு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் ஒரு விவசாயகுடும்பத்திலிருந்து வருகிறேன். விவசாயி என்று கூறுவதில் பெருமையடைகிறேன். ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயி மசோதாவில் உள்ள மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பாதுகாப்பான சட்டமாக இருக்கிறது.

அதன் காரணமாகவே அதிமுக நாடாளுமன்றத்தில் விவசாயிகள் சட்டத்தை ஆதரித்தது. விவசாயிகளுக்கு எதிராக திட்டங்கள் வரும்போது அதனை அதிமுக கண்டிப்பாக எதிர்த்து நிற்கும், தஞ்சைப் பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை அதிமுக கொண்டுவரவில்லை.

விவசாயி என்பதில் பெருமையடைகிறேன்

அதை தடுத்து நிறுத்திய அதிமுக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. இந்த சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி எஸ். ஆர். சுப்பிரமணியனிடம் அதிமுக கட்சியின் சார்பாக விளக்கம் கேட்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:"சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும்" - இந்தி தெரியாததால் கடன் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details