முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவரப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் வழங்க காலதாமதமானதால், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.