தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் செழிப்பான மாவட்டமாக மாறும் - முதலமைச்சர் பேச்சு - ramanathapuram district will become a prosperous district

ராமநாதபுரம் மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும் என முதலமைச்சர் நம்பிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும் என முதலமைச்சர் நம்பிக்கை

By

Published : Jan 2, 2021, 6:41 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர், பரமக்குடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் தனியார் மஹாலில் மகளிர் குழு உடனான சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும் என முதலமைச்சர் நம்பிக்கை

இந்தச் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி, "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகிய இருவரும் ஏழைகளுக்கான ஆட்சியை வழங்கினர். அதேபோல் தற்போதும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றுவதற்கு, அதிமுக அரசு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

இதன்மூலம் 311-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறியுள்ளது. அடுத்த ஆண்டு புதிதாகத் தொடங்கவுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து, 140-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் அமையவுள்ளது.

இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்ட தண்ணீர் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். விரைவில் ராமநாதபுரம் மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: வெற்றிநடை போடும் தமிழகம்' - எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் இன்று பரப்புரை!

ABOUT THE AUTHOR

...view details