முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று கரோனா பணிகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறார். அதன்படி ராமநாதபுரத்திற்கு நாளை செப்டம்பர் 22ஆம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார. பின்னர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ராமநாதபுரத்தில் கரோனா பணிகளை ஆய்வுசெய்ய முதலமைச்சர் வருகை - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம்: கரோனா பணிகளை ஆய்வுசெய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதால் மாவட்டத்தில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

ராமநாதபுரத்தில் கரோனா பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை
தொடர்ந்து முதலமைச்சர் ராமநாதபுரம் விவசாயிகளைச் சந்திக்கிறார். இதற்காக மாவட்டத்தில் சுமார் 5000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக முதலமைச்சருடன் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.