ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கத்தின் சார்பாக, இன்று (ஜன. 01) ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஏழை மக்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதுவருட பிறப்பு மற்றும் சுப தினங்களில் தனியார் தொண்டு நிறுவனம் (இன்னர் வீல்) சார்பில் ஏழை எளியவர்களுக்கு உடைகள், கல்வி உதவித்தொகை, மருத்துவம் போன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர்.
புத்தாண்டையொட்டி ஏழை மக்களுக்கு புத்தாடை வழங்கிய தொண்டு நிறுவனம் - புத்தாடை வழங்கிய தொண்டு நிறுவனம்
ராமநாதபுரம்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக, புத்தாண்டையொட்டி ஏழை மக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
புத்தாண்டையொட்டி ஏழை மக்களுக்கு புத்தாடை வழங்கிய தொண்டு நிறுவனம்
இந்நிலையில் இன்று வயது முதிர்ந்த ஏழைப் பெண்கள் சுமார் 100 நபர்களுக்கு, புதுச் சேலையும், இனிப்புகளும், மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் சங்கத்தின் தலைவி பிரதா சிவக்குமார், செயலாளர் ரேகா மணிகண்டன், தஹரிதா ராகேஷ் குமார், ரூபா சேகர், திவ்யலட்சுமி சங்கர் ஆகியோர் ஏழை மக்களுக்கு புத்தாடையை வழங்கினார்கள்.