ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கடந்த ஏழு மாதங்கள் பணிபுரிந்து வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் ‘சுந்தரராஜ்’ ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.
2ஆவது ஆட்சியர் சந்திரகலா
இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் என்பதன் காரணமாக இன்று (ஜூன் 16) மாற்றப்பட்டுள்ள 18 மாவட்ட ஆட்சியர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் ராமநாதபுரத்தில் இருந்து தென்காசி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுர மாவட்ட ஆட்சியராக தமிழ்நாடு நகர்ப்புற பெண்கள் வளர்ச்சியின் நிர்வாக இயக்குநராக பணியிலிருந்த ‘சந்திரகலா’ நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுர மாவட்ட இரண்டாவது பெண் ஆட்சியர் சந்திரகலா என்பது குறிப்பிடத்தக்கது.