தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ராமநாதபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி செய்தவர்களை சிசிடிவி காட்சி மூலம் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

By

Published : Aug 1, 2021, 9:45 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடி கிரியம்பலம் நாராயண தெருவைச் சேர்ந்தவர் கமலம். இவர், அதே பகுதியில் வடை வியாபாரம் செய்து வருகிறார்.

செயின் பறிக்க முயற்சி

இவர், நேற்று (ஜூலை 31) மாலை மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கமலத்தின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர்.

அப்போது, கமலம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து, இருச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

சிசிடிவி மூலம் விசாரணை

இது குறித்து கமலம் பரமக்குடி டவுன் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவம் இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.

சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

அதில், பதிவாகிய காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: பட்டப்பகலில் துணிகரம்

ABOUT THE AUTHOR

...view details