ராமநாதபுரம்: கீழக்கரை அருகில் உள்ள மோர்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆயிசத் (29) அவ்வூர் ஊருணியில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்து இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்து தப்பியுள்ளார்.
இது குறித்து ஆயிசத் அளித்தப் புகாரின் பேரில், கீழக்கரை துணை கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி, இரண்டே மணி நேரத்தில் சின்ன ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம்(32) என்பவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து தாலிச் சங்கிலியை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனர்.