ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி இந்திரா தேவி (27). இவர்களுக்கு மூன்று வயதில் லத்திகா என்ற மகளும், ஒரு வயதில் சஞ்சய் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், லத்திகா காலில் ஏற்பட்டிருந்த வண்டு கடிக்கு சிகிச்சை அளிக்க பச்சை இலை வைத்தியம் பார்ப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை இந்திரா தேவி வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது, சிகிச்சைக்காக தேங்காய் எண்ணெய் எடுப்பதற்க்காக இந்திராதேவி உள்ளே சென்ற போது, மகன் சஞ்சய் தேவ் கழுத்திலிருந்த ஒரு பவுன் செயினை பறித்துக்கொண்டு இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, அக்கம், பக்கத்தினர் விரட்டிச் சென்று அந்த இளைஞரை பிடித்து உச்சிப்புளி காவல்துறையில் ஒப்படைத்தனர்.