உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன், ராமேஸ்வரம் நகர அதிமுகச் செயலாளர் அர்ச்சுணன், விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஆகியோர் மீது ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று(ஏப்.2) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் அளித்தப் புகார் மனுவில், 'கடந்த மார்ச் 31ஆம் தேதி ராமேஸ்வரம் வருகை தந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தேர்தல் கமிஷன் அனுமதி பெறாமல், ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சொந்தமான விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் மேடை அமைத்து பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டத்தை நடத்தியுள்ளார்.