தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராமங்களுக்கு முழுமையாக வந்து சேராத காவிரி கூட்டுக்குடிநீர்: தள்ளுவண்டிகளுடன் அலையும் பொதுமக்கள் - Cauvery Koottu Kudineer who did not come fully to the villages

ராமநாதபுரத்தில் கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் முழுமையாக வந்து சேராததால், பொதுமக்கள் நீருக்காக அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கிராமங்களுக்கு முழுமையாக வந்து சேராத காவிரி கூட்டுக்குடிநீர்
கிராமங்களுக்கு முழுமையாக வந்து சேராத காவிரி கூட்டுக்குடிநீர்

By

Published : Jun 23, 2021, 7:00 PM IST

ராமநாதபுரம் அருகேயுள்ள நயினார்கோயில், மதுரை சாலை பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் குறைந்தளவே விநியோகிக்கப்படுவதால், அன்றாடத் தேவைக்காக குடங்களுடன் தள்ளுவண்டியில் அலைந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் நகர், புறநகர்ப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இக்குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால், குடிநீர் விநியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக நயினார்கோயில் சாலையிலுள்ள பாண்டியூர், பனையூர், தேர்த்தங்கல், காவனுார், மதுரை சாலையிலுள்ள அச்சுந்தன்வயல் கருங்குளம், லாந்தை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வருவது இல்லை.

அப்படியே வந்தாலும் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் என பெயரளவில் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், திருப்புத்துாரை அடுத்து உள்ள தாயமங்கலம் விலக்கு பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால் 10 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து குழாய்கள் பழுது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காததால், பெண்கள் குடங்களை தள்ளுவண்டிகளில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தூரம் வரை சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை தொடர்கிறது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் குடிநீர் வடிகால் வாரியமும் துரித நடவடிக்கை எடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் தேவையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details