ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிப் பகுதியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். அப்பகுதியில் ஏராளமான தோட்டங்கள் அமைந்துள்ள நிலையில் நாய், பூனைகள் உள்ளிட்ட வீட்டு செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன.
சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் அப்பகுதிக்குச் செல்லும் அடையாளம் தெரியாத கும்பல், கண்களில் படும் பூனைகளைத் தாக்கி அவற்றைத் தரையில் அடித்துக் கொலைசெய்து பைகளில் எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று (ஜூன் 24) இரண்டு நபர்கள் அப்பகுதியில், ஒரு பூனையை அடித்துக் கொலைசெய்தனர். அப்போது அருகிலிருந்த சிசிடிவியில் இது தொடர்பாக பதிவான கட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
பூனை கொடூரமாக அடித்துக் கொலை இதனைக்கண்ட பொதுமக்கள், விலங்கு நல ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தல் - போராட்டம்!