சென்னை, அம்பத்தூரை சேர்ந்த கார் ஓட்டுநர் கணேஷிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேது குமார் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சென்று வர வாடகைக் கார் வேண்டி கேட்டுள்ளார். இந்நிலையில், காருக்கான இ - பாஸை தானே எடுத்து விடுவதாகவும், அதன் மூலம் சென்று வரலாம் எனவும் ஓட்டுநர் கணேஷ் அவரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தனது மனைவி உட்பட நான்கு பேரை அழைத்துக் கொண்டு தன் உறவினரைப் பார்க்க,சேது குமார் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனுக்கு வந்துள்ளார். இந்நிலையில், பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது போலி இ - பாஸ் மூலம் அவர்கள் பயணித்தது தெரிய வந்தது.