தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களை கடித்து தப்ப முயன்ற கஞ்சா விற்பனையாளர்கள் கைது - ராமநாதபுரம் அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம்: காவலர்களை கடித்துத் தப்ப முயன்ற கஞ்சா விற்பனையாளர்கள் இருவரிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனையாளர்கள்
கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனையாளர்கள்

By

Published : Aug 8, 2021, 6:29 PM IST

ராமநாதபுரம் அருகே இருமேனி கடற்கரை கிராமத்தில் நேற்று (ஆக. 7) காலை உச்சிப்புளி காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நால்வர் அங்கு சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை காவலர்கள் ரமேஷ்பாபு, ஜெகதீசன் ஆகியோர் வழிமறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் இருந்த பைகளில் கஞ்சா இருப்பதை அறிந்த காவலர்கள், நால்வரையும் கைது செய்ய முயன்றுள்ளனர்.

காயமடைந்த காவலரின் கை

காவலர்கள் கைகளை கடித்த கஞ்சா கும்பல்

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கஞ்சா கும்பல், காவலர்களின் கைகளைக் கடித்துவிட்டு தப்ப முயன்றது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கஞ்சா கும்பலைச் சேர்ந்த பிரசாத் (23), காளிதாஸ் (19) ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீதமிருந்த காளிதாஸின் தாய் சந்திரா, ரஞ்சித் ஆகிய இருவர் தப்பியோடினர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனையாளர்கள்

காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காவலர்களை, காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க:லாரியுடன் நெல் மூட்டைகளை கடத்த முயற்சி... சிசி டிவி காட்சி மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள்!

ABOUT THE AUTHOR

...view details