தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ராமநாதபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்’ - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம்: மாவட்டத்தில் 27 கரோனா கட்டுப்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

By

Published : Apr 10, 2021, 8:00 AM IST

ராமாநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பரமக்குடி பேருந்து நிலையம், காந்தி சிலை, நகைக்கடை பஜார், தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். வணிக நிறுவனங்கள், வங்கிகள், பேருந்துகள் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு செய்தனர்.

பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த நடத்துனர், ஓட்டுநர், பயணிகள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாதவர்களிடம் ஏழு லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 27 கரோனா கட்டுப்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுகாதார ஆய்வாளர், காவல்துறை ஆய்வாளர், சுகாதார அலுவலர்கள் ஒவ்வொரு குழுவிலும் பணியில் இருப்பார்கள். இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க:தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டிய நேரம் இது

ABOUT THE AUTHOR

...view details