தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கச்சிமடம் அருகே பற்றி எரிந்த குடிசை வீடு! - ராமநாதபுரம் மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம்: தங்கச்சிமடம் அருகே குடிசை வீடு ஒன்று பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Ramanathapuram District News
Ramanathapuram District News

By

Published : Jun 18, 2021, 6:37 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வலசை தெருவில் உள்ள இட்லி வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்திவருபவர் பத்மா (64). அவரது மகன் சரவணன் ஆட்டோ ஒட்டி பிழைப்பு நடத்திவருகிறார்.

இந்த நிலையில், தாயும் மகனும் இருந்த குடிசை வீடு பெரும் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது. நேற்று இரவு 2 மணியளவில் அடுப்பில் உள்ள கங்கு தெறித்து தீப்பரவி குடிசை வீடும் உள்ளே இருந்த மொத்த பொருள்களும் எரிந்தன.

மேலும் தீ அருகில் இருந்த தென்னை மரங்களிலும் பரவி அதுவும் எரிய ஆரம்பித்தது. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனால் அடுத்தடுத்து இருந்த வீடுகள் இந்தப் பெரும் விபத்திலிருந்து தப்பின. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details